• +91 8344448944

கஜா சூறாவளி செயல்பாடுகள்

trust arubadai

பாலக்குறிச்சி

பாலக்குறிச்சி ஆற்றங்கரையில் புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு திரு.Rtn.சந்துரு அவர்களும், திருப்பூர் திரு.பாரதிதாசன் நண்பர்களும் மற்ற நண்பர்கள் கொடுத்த குழந்தைகளுக்கான உடைகள், பால் பவுடர், பாய், கைலி, போர்வை, கொசுவர்த்தி, கோதுமை மாவு, ஆர் எஸ் பதி தைலம், தார் பாய் ஆகியன வழங்கப்பட்டது.

நன்றியுடன்...

ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை.

trust arubadai

சித்தாய்மூர்

சித்தாய்மூர் பள்ளியில் கஜா புயலினால் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டி காணாமல் போனது அதற்கு பதிலாக புதிய 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையால் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

புயலினால் பாதிக்கப்பட்ட இளையான்குடி, ஆண்டிபாளையம், பையூர், கொளப்பாடு ஆகிய கிராமங்களுக்கு திருமதி.நீலாயதாட்சி அவர்கள், திருமதி.அனிதா அவர்கள், திரு.சுரேஷ் VDP அவர்கள், திருப்பூரில் இருந்து திரு.பாரதிதாசன், திரு.கண்ணன், பெருந்துறை திரு.ரத்தீஷ் அவர்கள், திரு.வெங்கடேஷ், திரு.சிவா & நண்பர்கள் மற்றும் நாகை The KARUR vysya bank - Staffs ஆகியோர் கொடுத்த புடவை, போர்வை, கைலி, நைட்டி, துண்டு, பாய், அரிசி (2 Kg), ஆர் எஸ் பதி தைலம், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிஸ்கட், கோதுமை மாவு (1/2 Kg) ஆகிய பொருட்கள் 300 குடும்பங்களுக்கு வழங்கபட்டது..

உதவிகரம் நீட்டிய அன்பு உள்ளங்களுக்கு என்றென்றும் நன்றியுடன்..,

ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை.

trust arubadai

அம்மனூர்

கஜா புயலால் வீடுகளை இழந்த அம்மனூர் கிராமத்தில் தற்காலிக கூரைகள் அமைக்க படுதாகளும் விழுந்த மரங்களை வெட்டி அப்புற படுத்தியா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள்

trust arubadai

கொத்தங்குடி

நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று கொத்தங்குடி கிராமத்திற்கு மனிதம் வெல் தொண்டு நிறுவனம் கஜா புயலால் வீடுகளை இழந்த அம்மனூர் கிராமத்தில் 30 குடும்பங்களுக்கு தார்ப்பாய், கொசு வலை, சோலார் விளக்கு உட்பட பொருள்கள் வழங்கப்பட்டது மனிதம் வெல் தொண்டு நிறுவனத்திற்க்கு நனறியினை தெரிவித்து கொள்கிறோம்.

trust arubadai

PR புரம்

நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் PR புரம் பகுதியில் கஜா புயலினால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் போது.

trust arubadai

கூமூர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதியில் ஒன்றான கூமூர் கிராமத்தில் இன்று (23.11.18) நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று திரு.Rtn.கோபி சார், திரு.Rtn.சோமு சார் ஆகியோரின் வழிகாட்டுதலில் 100 குடும்பங்களுக்கு கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கத்தில் இருந்து இந்த இக்கிராமத்திற்க்கு மளிகை பொருட்கள், சோலார் லைட், புடவை, சட்டை, வாளி, தார்பாய், கொசுவலை, கைலி, போர்வை ஆகியவை விடாத மழையிலும் வழங்கபட்டது.

trust arubadai

கூமூர்

இன்று நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை யுடன் இணைந்து புயல் நிவாரண பணியாற்றிய வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜெயராம் நண்பர்கள் குழுவினர்.

trust arubadai

ராமர்மடம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமர்மடம் ( தெற்கு), பெரியார் நகர், மாதா கோவில் தெரு, யாதவர் தெரு, பகுதியில் கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையிடம் கொடுக்கபட்ட அரிசி, பருப்பு, காய்கறிகள், ஊறுகாய், மெழுகுவர்த்தி, சிறுவர்கள்களுக்கான தின்பண்டங்கள் போன்றவை ஆறு முகாம்களிலும், வீடுகளிலும் கொடுக்கபட்டது.

trust arubadai

ராமர்மடம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட ராமர்மடம் (வடக்கு) பகுதியில் இன்று (20.11.18) நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளைக்கு திரு.சரவண ராஜ்குமார் மற்றும் திருமதி.ரம்யா ராஜ்குமார் அவர்கள் வழங்கிய மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி சுருள்கள், பிஸ்கட் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

trust arubadai

திருத்துறைப்பூண்டி

கஜா புயலால் பாதிக்க பட்ட திருத்துறைப்பூண்டி நகர பொது மக்களுக்கு உதவும் பொருட்டு திரு.R.S.பாண்டியன் அவர்களின் அழைப்பின் பேரில் நாகபட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையினர் 30 முகாம்களில் தங்கவைக்க பட்டிருந்த 5000 நபர்களின் உணவிற்க்காக 1.5 டன் அரிசியும் 1.25 டன் காய்கறிகளையும், 1000 வீடுகளுக்கு மெழுகு வர்த்தி மற்றும் கொசு வர்த்திகளை நாகை ஸ்ரீ அறுபடை அறக்கடடளையினர் 18.11.2018 அன்று திரு.R.S.பாண்டியன் அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.

அது போல நாகை, திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் உள்ள முகாம்கள்களில் தங்க வைக்கபட்டிருந்தவர்களுக்கு உணவிற்க்கான பொருட்களை ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை யால் வழங்கப்பட்டது

எங்கள் நேர்மையான நன்றி