• +91 8344448944

List Of Siddhars And Their's Details

sittars

அகத்தியர் சித்தர்

தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர். இவரைக் கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் முனி, குட முனி என்று பல பெயர்களால் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியர் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் இவருடைய மாணவர்களில் ஒருவர் என்றும் கூறுவார்கள்.

அகத்தியரிடம் இருந்தே ஒரு சித்தர் மரபு தொடங்கியது எனலாம். அகத்தியர் மருத்துவம், ஞானம், நாடி சாஸ்திரம், சோதிடம், யோகம், மந்திரம் போன்ற பல துறைகளில் பல நூல்களைப் படைத்துள்ளார் என்பர்.


  • அகத்தியர் பரிபூரணம்
  • ஞான காவியம்
  • வாத காவியம் 1000
  • வைத்திய காவியம் 1500
  • என்பன போன்ற பல நூல்கள் இவர் பெயரில் கிடைக்கின்றன. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

sittars

திருமூலர் சித்தர்

சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.

  • திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
  • திருமூலர் சிற்ப நூல் – 1000
  • திருமூலர் சோதிடம் – 300
  • திருமூலர் மாந்திரிகம் – 600
  • திருமூலர் சல்லியம் – 1000
  • திருமூலர் வைத்திய காவியம் – 1000
  • திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
  • திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
  • திருமூலர் சூக்கும ஞானம் – 100
  • திருமூலர் பெருங்காவியம் – 1500
  • திருமூலர் தீட்சை விதி – 100
  • திருமூலர் கோர்வை விதி – 16
  • திருமூலர் தீட்சை விதி – 8
  • திருமூலர் தீட்சை விதி – 18
  • திருமூலர் யோக ஞானம் – 16
  • திருமூலர் விதி நூல் – 24
  • திருமூலர் ஆறாதாரம் – 64
  • திருமூலர் பச்சை நூல் – 24
  • திருமூலர் பெருநூல் – 3000
  • போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள்

sittars

அழகண்ணர் சித்தர்

தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும். அவரை அங்கே பார்த்தேன், இவ்விடத்தில் பார்த்தேன் என்பார்கள். ஆனால் எங்கும் தங்க மாட்டார். முடிவில்லாத வழிப்பயணத்தில் போய்க் கொண்டே இருப்பார். யார் எது கேட்டாலும், பதில் கூறவும் மாட்டார். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்கும். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று வழங்கினர். காலப்போக்கில் அழுகண்ணர் என்றும் அழுகணிச் சித்தர் என்றும்அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கினர் என்பதும் தெரிய வருகிறது.

இச்சித்தர் ஊரைப் பார்த்து அழுதார். உலகைப் பார்த்து அழுதார், தன்னையே பார்த்தும் அழுதார்.

பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன் மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா. - பாழாய் முடியாதோ. என்று பாடுகின்றார்.

இப்பாடலில் ‘கண்ணம்மா’ என விளித்துப் பாடுவது இறைவனை. பிற்காலத்தில் வந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு இதன் அடிப்படையில் தோன்றுகின்றது.

வேதாந்தக் கருத்துகள், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளார். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23ஆகிய இரண்டு நூல்கள் அவருடைய படைப்புகளாகும்.

நாகப்பட்டினத்தில் உள்ள சிவபெருமான் கோயில் வளாகத்திலேயே அழுகண் சித்தர் சமாதியும் உள்ளது.

sittars

இடைக்காடர் சித்தர்

இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர்.

இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப் பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

sittars

காலாங்கிநாதர் சித்தர

வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய வகாரத் திரவியம், வைத்திய காவியம், ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஞான பூஜா விதி, இந்திர ஜால ஞானம், ஞான சூத்திரம், உபதேச ஞானம், தண்டகம் போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர்.

A photograph of sliced kiwifruit on a while plate

கமலமுனி சித்தர்

கமல முனிவர் வைகாசி மாத பூச நட்சத்திரத்தில் அவதரித்தவராவார். அவர் பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். சீரேதான் சீனபதி தன்னிலப்பா சிறப்புடனே நெடுங்காலம் இருந்த சித்து என்கிறார். அப்பேற்பட்ட கமலமுனி சதுரகிரியை நோக்கி வந்தார். சித்தர்களின் பெருநூல்களை அரங்கேற்றம் செய்ய எங்கெங்கோ அலைந்து இறுதியில் சதுரகிரிக்கு வந்தார். முழுவதும் வேதாந்த விசாரங்கள் நிறைந்த நூலை பல தர்க்கவாதம் பேசிப் பேசி வெளிவிடாது தடுத்தனர்.

அப்போதுதான், ‘சித்துமுனி கமலர்தாமும் யெழிலாக சதுரகிரி மலையோரந்தான் சட்டமுடன் ரோமரிஷி தன்னைக் கண்டார்’. ரோமரிஷியை கண்டு இதுவரை விதிவசமாக நிகழ்ந்தவற்றை கூறினார். ரோமரிஷி, ஆறுதல் அளிக்கும் வகையில், ‘‘பட்டயம்போல் வரங்கேற்றல் செய்வதற்கு பாங்குடனே சம்மதங் கொண்டருளினாரே” என்று கூறுகிறார். இப்படிப்பட்ட அருமையான நூலை அரங்கேற்றம் செய்வதற்கு எங்களுக்கு சம்மதம் என்று கமலமுனியின் கவலை தீர்த்தார்.சகல சித்தர்களும் ஒன்று கூடினர். இருள் அகன்ற குகையினில் ரிஷிகள், தேவர்கள் என்று எழில்மிக்கோர்கள் கூட்டமாக அமர்ந்தனர். ‘‘மருளகற்றும் கிரந்தமதை கண்டாராய்ந்து மார்க்கமுடன் வரங்கேற்றல் செய்தார் பாரே” என்று அகத்தியர் கூறுகிறார். மருளகற்றும் என்பதை உலக மாயையான மயக்கத்தை அகற்றிடும் ஞான நூலை அரங்கேற்றம் செய்தார் என்று கொள்ள வேண்டும். இந்த நிகழ்விற்குப் பிறகு கமல முனிவர் சமாதியடைந்ததாக பாடல் தெரிவிக்கிறது. இங்கு சமாதி என்பது தனக்குள் தான் ஆழ்ந்து ஆத்மானுபவம் பெற்ற நிலையாகும். சில சமயம் முற்றிலும் தம்மை மறைத்துக் கொண்டு எங்கேனும் குகைகளில் சமாதியில் இருப்பர். ஒரு பாடலில் ‘தேகமதை சிலகாலம் பூலோகத்தில் தெளிவுடனே யாரொருவர் காணாமற்றான் யூகமதாய் மறைத்து வைத்து” என்று சில காலங்கள் தம்மை மறைத்துக் கொள்ள கமலமுனி ஆவலுற்றார்.

கமலமுனி தான் சொன்னதுபோலவே, ‘‘கமல முனிவர்தாமும் செத்தவர்போல் சதுரகிரி மலையோரத்தில்” என்று தம்முடலை கிடத்தி சமாதியில் ஏகினார்.இப்படி சதுரகிரியில் எத்தனையோ சித்தர்கள் சமாதி கொண்டருளினர். இவர்கள் சமாதியில் கிடந்த இடங்களை சுந்தரமகாலிங்கம் அருளினில் மட்டுமே நம்மால் காணமுடியும். சதுரகிரியின் உச்சியில் சித்தர்களுக்கெல்லாம் மகாசித்தர் ஒருவர் இருந்தார். அவர் திருப்பெயர் காலாங்கிநாதர். அவர்தம் நாமத்தை சொல்லியே பல சித்தர்கள் முக்தி பெற்றனர்.

திருவாரூர் ஆரூராரின் ஆலயத்தில் சித்தர் கமலமுனி அவர்களின் சமாதி உள்ளது.

sittars

கருவுரார் சித்தர்

புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிளிர்கிறது.சித்த புருஷர் என போற்றப்படும் கரூவூரார் சோழ நாட்டில் கரூவூரில் சித்தரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரைப் பற்றிய பல அரிய தகவல்கள் கர்ண பரம்பரையாக அபிதான சிந்தாமணி நூலில் அழகாகச் சொல்லப் பெற்றுள்ளது. இவர் கரூவூரில் வேதியர் குலத்தில் பிறந்து ஞான நூல்களை ஆராய்ந்து சைவ மதத்தைக் கடைப்பிடித்து சிவயோக சித்தி அடைந்தவர்.

இவரது குல தெய்வம் அம்பாள். ஒரு முறை போகர் என்ற சித்தர் திருவாவடுதுறைக்கு வந்த சமயம் கரூவூரார் அவரை வணங்கி தம்மைச் சீடராக ஏற்க வேண்டினார். அதற்குப் போகர் நீர் வணங்கும் அம்பாளை நாள் தோறும் வழிபாடு செய். அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபடும் முறைகளை கூறி உபதேசித்தார்.அதன் பின் கருவூரார் அம்பாளை வழிபட்டு வந்தார். குருவின் வாக்கு உண்மையானது. கரூவூரார் எல்லாவித ஞானங்களையும் பெற்றார். இவ்வாறு இருக்கையில், அவர் ஜாதி சம்பிராயங்களைப் புறக்கணித்தைக் கண்டு ஆவேசமும், வெறுப்பும் கொண்ட வேதியர்கள் சிலர் இவரைப் பழிதூற்றி அவரது செயல்களை அறுவறுத்துப் பேசினர்.

இதனால் அவர்களுக்கு அறிவூட்டவும், மக்கள் வழிபாடு மூலம் தெய்வத்திடம் தம்மை ஒப்படைக்கவும் அம்பாளை வழிபட வைக்கவும், காலமில்லாத காலத்தில் அடை மழை பெய்ய வைத்தார். ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்தும், பூட்டி இருந்த கோவில் கதவு திறக்கச் செய்தும், பூதங்கள் தமக்குக் குடை பிடித்து வரச் செய்தும், பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். கரூவூரார் பல புண்ணிய ஸ்தலங்களை வணங்கிச் சென்று கஜேந்திர மோட்சம் என்னும் ஸ்தலத்தை அடைந்து அங்கு இருந்த முற்றீசரை அழைக்க அவர் தரிசனம் தந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

இவர் மது வேண்டும் என்று கேட்டார். முன்றீசர் காளிக்குக் கட்டளையிட காளி மதுக்குடத்துடன் கரூவூரார் முன்னிலையில் பிரசன்னமானார். இவர் காளியிடம் மீன் வேண்டும் என்று கேட்க காளி தேவி கோட்டவாதிகளைக் கேட்க அவர்கள் எங்கு தேடியும் மீன் கிடைக்காததைக் கண்டு அவர் வன்னிமரத்தை நோக்கினார். உடனே அம்மரம் மீன் மாரி பொழிந்தது. அவரது யாத்திரை வழியில் ஒரு விஷ்ணு ஆலத்தை அடைந்தார். அங்குள்ள பெருமாளைக் கூவி அழைத்தார். பெருமாள் வராதாதைக் கண்டு அக் கோவில் பூசை இன்றி இருக்கக் கடவது என்று சபித்துவிட்டு அங்கிருந்து நீங்கி திருக்குற்றாலம் அடைந்தார். அங்கு சிவ தரிசனம் செய்து திருவிசைப்பா பாடி பொதிகையில் எழுந்தருளி இருந்தார். ஒரு முறை கருவூரார் திருநெல்வேலியப்பனின் சன்னிதானத்து முன் நின்று நிவேதனக் காலமென்று அறியாமல் நெல்லையப்பா, நெல்லையப்பா, நெல்லையப்பா என மூன்று முறை கூவி அழைத்தும், மறு மொழி வராததால் கடவுள் இங்கில்லை என்று சொல்லி அவ்விடத்தை விட்டுச் செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு முதலியன முளைத்தன. அதைக்கண்ட நெல்லையப்பர் ஒடி வந்து மானூரில் சந்தித்து தரிசனம் தந்து அடிக்கு ஒரு பொன்னும் கொடுத்து இவரை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சி தந்தார். அதனால் முன்பு முளைத்த எருக்கு முதலியன அழிந்தது. செந்நெல் என்று கூற ஆலயம் செழித்தது. பழைய பிராகாசம் உண்டாயிற்று.

திருவிடைமருதூர் ஆலயத்தை அடைந்து இறைவனை அழைக்க அவர் தன் தலையை சாய்த்து கரூவூரார் குரலுக்கு பதிலளித்தார். அதனால் இன்றளவும் திருவிடை மருதூரில் இறைவனது திரு உருவம் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே காணப்பெறுகிறது. மானூரில் இருந்த நாட்களில் தஞ்சை மன்னன் கட்டிய கோவிலில் சிவ பிரதிஷ்டையில் அஷ்டபந்தனம் பல முறை இளகி பந்தனமாகமாகப் போயிற்று. அதனால் சோழ மன்னன் வருந்திய போது ஒரு அசரீரி தோன்றியது. கரூவூரார் வந்தால் பந்தனமாகும் என்று கூறியது. அச் சமயம் போகர் தன் உருவம் மறைத்து அவ்விடம் வந்திருந்தார். அவர் அச் செய்தியை ஒர் நிலையில் எழுதி ஒரு காக்கையின் கழுத்தில் கட்டி கரூவூராரை அழைத்தார். ( போகர் தம் மன அலைகளின் மூலம் கரூவூராரை வரவழைத்தார் என்ற கூற்றும் உள்ளது )

கரூவூரார் கோவிலினுள் சென்று இலகாத பந்தனத்தில் தம் தாமபூல எச்சிலை உமிழ்ந்து அஷ்டபந்தனம் செய்ய உடனே பந்தனமாயிற்று. அதன் பின் திருவரங்கம் வந்தடைந்தார். அவ்வூரில் இருந்த அபரஞ்சி என்ற தாசி கரூவூராரின் தேகப் பொழிவையும், தேஜசையும் கண்டு இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். அபரஞ்சி தனக்கு இருந்த ஞான சம்பந்தமான ஐயங்களை கேட்டுச் சந்தேகம் நீங்கப் பெற்றாள்.

கரூவூரார் அரங்கநாதனைச் சந்தித்து இரத்தினப்பதக்கத்தைப் பெற்று வந்து இது உன் சேவைக்கு அரங்கன் சார்பாக நான் தரும் பரிசு என்று அளித்து, நீ எப்போது நினைத்தாலும் வருவேன் என்று கூறி யாத்திரை தொடர்ந்தார். அபரஞ்சி அந்த இரத்தினப் பதக்கத்தை அணிந்து வெளியே வந்த போது கோவில்தனியர் அவளைத் திருடி என்று சந்தேகித்துக் காவலிட்டு அவளை விசாரித்தார். அவள் எனக்கு இதை வேதியர் ஒருவர் அளித்தார் என்று கூறி கருவூராரை நினைக்க அவர் வந்து எனக்கு இதைத் திருவரங்கப் பெருமாளே கொடுத்தார் என்று கூறி அதற்குச்சாட்சியாகப் பெருமாளைக் கூவி அழைத்தார்.அதைக் கேட்ட பெருமாளும் ஆகாய வீதியில் பிரசன்னமாகி சாட்சியளித்தார். உண்மை உணர்ந்த அந்த ஊரார் கரூவூராரிடமும், அபரஞ்சியிடமும் தங்களை மன்னிக்க வேண்டினர். பிறகு கரூவூரார் கரூவூரை அடைந்து தம் இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது செல்வாக்கையும் புகழையும் கண்டு வெறுத்த சில வேதியர்கள அவருக்குப் பல வகையிலும் துன்பம் விளைவிக்க முயன்றனர்.

ஒவ்வொரு முறையும் அவர்களுக்குத் தோல்வியே ஏற்பட்டது. இறுதியில் கரூவூராரைக் கொலை செய்யவும் துணிந்து அவரைத் துரத்த ஆரம்பித்தனர். கரூவூரார் பயந்தது போல ஒடிச் சென்று திருஆனிலையப்பார் கோவிலை அடைந்து சிவபெருமானாய் வீற்றிருக்கும் பசுபதிஸ்வரை நோக்கி, ஆனிலையப்பா என்று கூறித் தழுவிக் கொள்ளவே இறைவன் அவரை ஜோதி வடிமாய் தன்னுள் ஏற்றுக்கொண்டார். இவரது ஆயுள் 300 ஆண்டுகள் 42 நாட்கள் என அறியப்படுகிறது. இன்றளவும் நீங்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கரூவூராருக்குத் தனிச் சன்னதி உள்ளது.

sittars

கோரக்கர் சித்தர்

சித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர். விபூதி எனில் சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள். மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள்.

மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள்.

சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்.அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். பின்னாளில் கோரக்கர் வடபொய்கை நல்லூரில் ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

sittars

குதம்பை சித்தர்

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன . குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

sittars

மச்சமுனி சித்தர

ஒரு சமயம், கடற்கரை யோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது. அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார். மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது.

இது மச்சமுனியின் அவதார வரலாறு. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார்.

வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

sittars

பாம்பாட்டி சித்தர்

கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பாம்பட்டியார் பிறந்தார். பாம்பை பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பதுவே அவரின் தொழிலாக இருந்ததால் அவர் பாம்பாட்டி எனப்பட்டார். விஷமுறிவு மூலிகைகள் பற்றி அறிந்திருந்ததால் மூலிகை வைத்தியராக இருந்தார். ஒருநாள் மருதமலையில் நாக மாணிக்கத்துடன் ஒரு பெரிய பாம்பு இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பிடிக்கச் சென்றார். காட்டில் அதை தேடியபோது சிரிப்பொலி கேட்டுத் திரும்ப சட்டை முனி சித்தரைப் பார்த்தார். எதற்கு வந்தீர், எதை தேடுகின்றீர் என்றதற்கு தான் மாணிக்க பாம்பை தேடுவதாக கூறினார். உனக்குள்ளேயே நவரத்னபம்பை வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே எனச் சிரித்த சட்டைமுனி, இதை தேடுவதை விடுத்து உனக்குள் இருக்கும் ‘குண்டலினி’ பாம்பைத்தேடிப் பிடி. மனிதனுள் இறைவனைக்காணும் ரகசியம் இதுவே, தியானம் சித்தியாகும். என்றார். உண்மைகளை உணர்ந்த பாம்பாட்டி அவர்காலில் வீழ்ந்து வணங்கினார். தொடர்ந்து யோகம் செய்ய குண்டலினி சக்தி கைவந்தது. சித்துக்கள் சித்தியானது. பல இடங்களையும் சுற்றிவந்தார். ஆங்காங்கே மக்களின் நோய்களைத் தீர்த்தார். ஒருநாள் அரசன் ஒருவன் இறந்திருப்பதை வான்வழியே வரும்போது பார்த்தார். அவன் உடலில் புகுந்தார். அனைவரும் மகிழ்வுற்றனர். அரசனின் செயல் முறைகள் மாறி இருப்பதை இராணி உணர்ந்தார். மக்களும் மன்னன் சித்தன்போல் பிதற்றுகின்றார் என்றனர். அரசியார் தன் சந்தேகத்தைப் போக்க மன்னனிடம் நிங்கள் யார் என்றார். மன்னன் உடலில் இருந்த சித்தரும் உண்மையைக் கூற அனைவரும் அவரை வணங்கினர். மன்னரான சித்தர் பல தத்துவப் பாடல்களைப் பாட அனைவரும் கவனமுடன் கேட்டனர். பின்னர் மன்னன் உடலிலிருந்து சித்தர் வெளியேரி தன் உடம்பில் புக, மன்னர் உடம்பு தரையில் வீழ, சித்தரின் ஆலோசனைப்படி ராணியார் ஆட்சி புரிந்தார். பாம்பாட்டியார் சித்தர் பாடல்கள், சித்த ஆரூடம், வைத்திய நூல்கள் முதலியனவற்றை எழுதியுள்ளார். மருதமலையில் சித்தியடைந்தார்.

A photograph of sliced kiwifruit on a while plate

போகர் சித்தர்

சீன தேசத்தில் துணிகள் வெளுத்து துவைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் போகர். இவர் புலிப்பாணியின் குரு. போகர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர். பழனி தண்டாயுத பாணி சிலையை புலிப்பாணியின் உதவியுடன் நவபாஷானக் கட்டில் தயாரித்தார். இறந்தவர்களைப் பிறக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியை பெற மேரு மலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்களின் சமாதியை அடைந்தார். ஒன்பதிரின் தரிசனம் போகருக்கு கிட்டியது. அவர்களிடம் சஞ்சீவினி மந்திர வித்தையைக் கற்றுத்தர வேண்டினார். தகுதியுள்ள வர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு. அவர்களை நீண்டகாலம் வாழவை என போகருக்கு அதுவரை தெரியாத காயகல்ப முறைகளை சொல்லித் தந்தனர். ஒருநாள் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். ஒரு புற்றிலிருந்து ஒளிக்கற்றை வருவதைப் பார்த்து அருகில் சென்றபோது உள்ளே ஒருவர் தியானம் செய்வதை அறிந்து வெளியே அமர்ந்து இவரும் தியானத்தில் இருந்தார். இவர் தியானத்தால் அவரின்தியானம் கலைந்தது. புற்றிலிருந்து வெளியே வந்தர் போகா எதிரிலிருக்கும் மரத்தின் பழத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசி எடுக்காது. நரை திரை மூப்பு வராது. தவம் செய்ய துணை செய்யும். என்று புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து இது உனக்குத் தவம் செய்ய பயன்படும் என்றார். அப்போது ஒர் பதுமை தோன்ற மேல்கொண்டு உனக்குத் தேவையானவைகளை இப்பதுமை சொல்லும் எனக் கூறிமறைந்தார். பழத்தைச் சாப்பிட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம், ஆகியவைகளை தெளிவாக சொல்லக்கேட்ட போகர் ஆச்சரியத்தில் இருக்கும்போது அது மறைந்தது. பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்தபோது உணவு சமைத்து உண்டபின் நீர் வேண்டி அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றார். ஒர் வீட்டுத் திண்ணையில் கூட்டமாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தாகத்திற்கு நீர் கேட்டார். யார் நீ, தூரப் போ, அருகில் வந்தால் துர் நாற்றம் வீசுகிறது என்றார்கள். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டார். அந்தப் பக்கம் வந்த பூனை ஒன்றை அழைத்து அதன் காதில் வேதத்தை ஓதினார். பூனை வேதம் ஓதியது. அதைகண்ட அந்தணர்கள் தங்கள் அறியாமையால் செய்த பிழையை மன்னிக்க வேண்டினர். அவர்கள் வறுமை நீங்க வழி கேட்டனர். போகர் அவர்கள் வீட்டிலிருந்த இரும்பை எல்லாம் ஆதிரசத்தால் தங்கமாக்கி கொடுத்தார். தாம் தயாரித்த இரச குளிகைகள்போல் நிறைய தயாரித்து தம் சீடர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பினார். ரோமாபுரி சென்று தூய்மையான ரசம் கொண்டு வர நினைத்து குளிகை ஒன்றினை வாயில் போட்டுக்கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றை தேடிப் பிடித்து தம்மிடம் இருந்த குடுவையில் நிரப்பிக் கொண்டார். விண்மார்க்கமாக பொதிகைமலை அடைந்தார்.

காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பி தஞ்சை பிரகதீசுவரர் ஆலய லிங்க பிரதிஷ்டை செய்ய பணித்தார். தட்சிணாமூர்த்தி உமைக்கு அருளிய ஞான விளக்கம் ஏழு லட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணாக்கர்களுக்கு உபதேசம் செய்தார் போகர், மற்ற சித்தர்கள் இறைவன் உபதேசத்தை வெளியில் சொல்வது குற்றம் அதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என தட்சிணாமூர்த்தியுடம் சொன்னார்கள். தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரித்தார்.

போகரே, நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்துள்ளீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர், மேறுமலைக்குச் சென்று தாதுக்களை தங்கமாக மாற்றினீர், ரோமாபுரி சென்று ஆதி ரசம் கொண்டு வந்தீர். உமாதேவிகு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீர். நீர் செய்த அந்த நூலைச் சொல்வீராக எனக் கேட்டு போகரின் நூலாழத்தையும் பொருள் சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்தார் போற்றினார்.

பழனியில் கடும் தவம் செய்து முருகப் பெருமானைக் கண்டார். அவரிடமிருந்து அவரை மூலவராக வடிவமைத்து விக்கிரமாகச் செய்து, அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும், காரிய சித்தி உபாயத்தையும் கேட்டு அறிந்தார். போகர் கனவில் முருகப் பெருமான் சொன்னபடி நவபாஷாணத்தில் சிலை செய்து பிரதிஷ்டை செய்தார். சிலையில் ஊறிவந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். அது போகருக்கு உள்ளொளியை பெருக்கியது. போகர் காண்டம் 12000, சப்தகாண்டம் 7000, நிகண்டு 1700, வைத்தியம் 1000, சரக்கு வைப்பு 800, ஜெனன சாகரம் 550, கற்பம் 360, உபதேசம் 150, இரணவிகடம் 100, ஞானசாராம்சம் 100, கற்ப சூத்திரம் 54, வைத்திய சூத்திரம் 77, மூப்பு சூத்திரம் 51, ஞான சூத்திரம் 37, அட்டாங்க யோகம் 24, பூஜாவிதி 20 ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். பழனியில் சமாதியடைந்தார். போகர் பூசித்த புவனேஸ்வரியம்மன் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் உள்ளது. போகருக்கு புலிபாணி சித்தர், காக புசுண்டர் உள்பட 63 சீடர்கள் இருந்தனர்.

A photograph of sliced kiwifruit on a while plate

புலிப்பாணி சித்தர்

போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால் புலியை வசியப்படுத்தி அதன் மீதேறி சென்று வெறும் கையாலேயே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். புலிமேல் சென்று பாணி- நீர் கொண்டுவந்ததால் புலிப்பாணி எனப் பெயர் வந்தது. இவர் போகரின் சீடர் ஆவார். பழனி மலை சிலை செய்ய போகருக்கு மிக உதவியாக இருந்தவர் இவர்தான். நவபாஷான மூலிகைகளை புலிமீதேறிச் சென்று பறித்து வந்தார். போகர் சமாதிக்கு செல்லுமுன் தண்டாயுதபணி பூஜைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். போகர் முருகன் சிலையை செய்து முடித்ததும் சீனா சென்று தன் தவ வலிமைகளை இழந்துவிடவே புலிப்பாணியார் அவரை முதுகிலே சுமந்து வந்து பழனியில் வைத்து அவருக்கு தவ வலிமைகளை மீண்டும் அளித்தார். வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் திறமையானவர். புலிப்பாணி வைத்தியம் 500, ஜோதிடம் 300, ஜாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூஜாவிதி 50, சண்முகபூஜை 30, சிமிழ்வித்தை 25, சூத்திரஞானம் 12, சூத்திரம் 9 ஆகிய நூல்கள் எழுதினார்.

நிவேதனமாக கமலா ஆரஞ்சு கொட்டை நீக்கி உரித்த சுலையாய், தக்காளி விதை எடுத்து உப்பு தூவி, தயிர் சாதம் உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து சிவப்பு வண்ண வஸ்திரம் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபடின் சிறப்பு,

A photograph of sliced kiwifruit on a while plate

புண்ணாக்கீசர் சித்தர்

காயகல்பம் உண்டு, அதிக ஆண்டுகள் இருந்து, பல சித்துக்களைச் செய்தவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் சீடர் என்பர். இவர் கேரளத்தில் உள்ள நாங்குணாசேரி என்ற ஊரில் சமாதி பெற்றார் என்பதாகப் போகர் கூறுகிறார்.

மூப்பு, சுண்ண செய்நீர், ஞானப்பால், மெய்ஞ்ஞானம், யோகப் பாடல்கள் போன்றன இவர் நூல்களாம். இவரது சீடர் மச்ச முனி

A photograph of sliced kiwifruit on a while plate

ராமதேவர் சித்தர்

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார்.

அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராம இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமயால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன. பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார். காலப்போக்கில் சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் , ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை. சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன. ஆண்டுகள் பத்தும் கழிந்தன. உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் சமாதிக்கு போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர். “சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான் போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.இம்முறை முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன் என்று கூறி சென்றார். சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானத. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கி அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் , “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.

A photograph of sliced kiwifruit on a while plate

சட்டநாதர் சித்தர்

தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார். தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும். சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார். சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

A photograph of sliced kiwifruit on a while plate

சுந்தரானந்தர் சித்தர்

அகமுடையார் குலத்தில் ஆவணி ரேவதி நட்சத்திரத்தில் சுந்தரானந்தர் பிறந்தார். இவரின் குரு சட்டைமுனி. யோகத்தில் பல ஆண்டுகள் இருந்து ஆற்றல் பெற்றார். அகத்தியர் வழிப்பட்ட லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார். சித்தரைப் பார்க்க அரசர் வந்தார். அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார். யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர். அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து வணங்கினர். கோவிலில் உள்ளே சென்று மறைந்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது. சுத்தரானந்தர் வைத்திய திரட்டு, காவியம், விஷநிஷவாணி, வக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஆனம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதினார்.

A photograph of sliced kiwifruit on a while plate

தேரையர் சித்தர்

ஔவையார் ஒரு ஊமை பிராமணனை அகத்தியரிடம் அழைத்துவர அகத்தியர் அச்சிறுவனை தன்னுடைய மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். பாண்டிய மன்னன் கூன் பண்டியனின் முதுகை தாம் சரி செய்வதாகக் கூறி தன் சீடர்களிடம் சில மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அவற்றை இடித்து சாறு பிழிந்து ஓர் பாத்திரத்தில் உற்றி கொதிக்க வைத்தார். அப்போது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே ஊமைச் சிறுவனிடம் அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார். கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு ஆசிரமத்தின் மேல் கூரையிலிருந்த ஓர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்ட சிறுவன் மூலிகைச் சாற்றை அடுப்பிலிருந்து இறக்க, அங்குவந்த அகத்தியரிடம் மூங்கில் நிமிர்ததைக் காட்டி தான் இறக்கி வைத்ததை சாடையில் கூற சிறுவனை பாராட்டினார் அகத்தியர். அந்த மூலிகைத் தைலத்தால் மன்னரின் முதுகு கூன் நிமிர்ந்தது. காசி மன்னன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தபோது அகத்தியர் அங்கு வர அவரிடம் தன் வேதனையைக் கூறியவன் அதை நீக்க வேண்டினான். அகத்தியர் நீ தூங்கும்போது ஒரு தேரைக்குஞ்சு உன் மூக்கு வலியாக உள்ளே சென்று மூளைப்பகுதியை அடைந்ததுதான் காரணம். இருந்தாலும் கவலைப்படாதே அதை நான் சரிசெய்கிறேன் என்றார் அகத்தியர். மன்னனை மயக்க நிலையில் ஆழ்த்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. சில நொடிகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. அங்கு தேரை இருந்தது. அதை எப்படி எடுப்பது என்று நினைத்தபோது சிறுவன் தண்ணீரை தேரையின் கண்ணில் படுமாறு வைக்க அது குதித்தோடியது. அகத்தியர் சந்தானகரணி எனும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மீண்டும் பழையபடி மூடினார். சிறுவனை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிகழ்வுக்குப்பின்சிறுவன் தேரையர் என்றழைக்கப்பட்டார். முன்பிறவியில் இராமதேவராக இருந்து தேரையர் ஆன சீடருக்கு தனக்குத் தெரிந்த சித்திகளையெல்லாம் போதித்தார். அவருடைய ஊமைத் தன்மையைப் போக்கினார். அப்போது தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் ஆனார். ஒருமுறை சித்தர் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட அகத்தியர் மருந்து கொடுத்தார், சரியாகவில்லை. தேரையரை அழைத்து அவரைப்போய்ப் பார்த்து வைத்தியம் செய்யச் சொன்னார். தேரையர் சென்று பார்த்து ஒரு கடுக்காய் குச்சியை எடுத்து வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் துளைவழி மருந்தை செலுத்தி வயிற்றுவலியை சரி செய்தார். அகத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்யாததற்கு காரணம் சித்தர் வாயின் பற்களில் உள்ள விஷத்தன்மையே என்பதை அறிந்து தேரையர் மருந்து கொடுத்தார் என்பதை அகத்தியர் உணர்ந்தார். தேரையரின் திறமையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த அவரை அழைத்து விருப்பமான இடங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய பணித்தார். அணமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்துவரும்போது அங்குள்ள அடியவர்களின் பிணியை நீக்கினார். அகத்தியருக்கு கண்பார்வை குறைந்து கொண்டு வந்தது. சீடர்களுக்கு தேரையரின் நினைவு வர அகத்தியரிடம் அனுமதி வாங்கிச் சென்றனர். அகத்தியர் புளியமரத்தடி நிழலில் உறங்கிச் செல்க என்றார். வெகு நாட்களுக்குப்பின் அணமயம் காட்டை அடைந்த சீடர்கள் தேரையரை சந்தித்தனர். விபரம் அறிந்தார். சீடர்கள் இரத்த வாந்தி எடுக்க தேரையர் அவர்களை வேப்பமரத்தடியில் தூங்கி செல்லுமாறும் தான் இரண்டு நாளில் வருவதாகவும் சொன்னார். திரும்பவந்த சீடர்கள் உடல் நலத்துடன் இருப்பதை அறிந்த அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் என்பதை உணர்ந்தார். தேரையர் வந்தார். அகத்தியரின் கண்ணை பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து சரி செய்தார். பார்வை தெளிவடைந்த அகத்தியர் தேரையா நீ தாடி மீசையுடனிருந்தால் எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்றவரை வீழ்ந்து வணங்கினார். ஒருநாள் அகத்தியர் தேரையரிடம் ‘கண்வெடிச்சான் மூலிகை’ வேண்டும் என்றார். அந்த மூலிகையைப் பறித்ததும் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறிந்தவர் கண் பார்வை போய்விடும். ஆனால் தேரையர் தயங்காமல் அதைக்கொண்டு வருகிறேன் என்று கிளம்பினார். காட்டில் அந்த மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அதன் அருகில் அமர்ந்து தேவியைத் தியானம் செய்ய தேவி தோன்றி, தேரையா இந்தா மூலிகை என்றார். அகத்தியரிடம் மூலிகையைத் தர அவர் மிக மகிழ்ந்து தேரையா அனைத்து சோதனைகளிலும் நீ தேறினாய். நீ அறிந்த மூலிகைகள் பற்றி நூல் எழுது எனச் சொன்னார். தேரையர் பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறிநூல், தைல வர்க்க சுருக்கம், வைத்தியமகா வெண்பா, மணிவெண்பா, மருந்துப் பதம், குலைபாடம் ஆகிய நூல்களை எழுதினார். நீண்ட நாள் மருத்துவ சேவையில் ஈடுபட்டு தோரணமலையில் தவம் செய்து ஜீவசமாதி அடைந்தார்.